007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி… அதுவரை மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் சில கனடிய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் ஒன்றுதான் „நையாண்டி மேளம் “ கணேஷ் தம்பையா அவர்களின் இயக்கத்தில் சின்னக் குட்டி T.தயாநிதி, ஆசைப் பிள்ளை சுதா, இரா,குணபாலன் ஆகியோருடன் இன்னும் சில கலைஞர்களும் அற்புதமாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்த 200 அங்கங்கள் தயாரானது ஐரோப்பாவிலும், கனடாவிலும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதன் பிரதிபலிப்பு ஐரோப்பிய, கனடிய அரங்குகள்,மற்றும் திறந்த வெளி மைதானத்தில் இவர்களின் நிகழ்சிகள் நடந்தன இது கடந்து வந்த பாதை.. அல்லது வரலாறு… (பின்னரும் தொடர்ந்தது, தொடர்கிறது)2017 …..பத்து ஆண்டுகள் கடந்து 7,8,9, ஜூலை 2017 இதே கலைஞர்களின் குதுகலம் கனடிய மண்ணில்….ஆச்சரியம்!!!!!!! ஆனந்தம்…காரணம் என்ன? ???புரியவில்லை எனக்கு????“ஒரு பாறையில் வேர் விட்டு நிமிர்ந்து நிற்கிறது ஒற்றை மரம்“பாறை துளைத்து வேர் விட்ட மரத்தின் திறமையைப் பாராட்டவா??,??இல்லை…வேருக்காய் இழகிய பாறையைப் பாராட்டவா?????என்பது போல்ரசிகனின் இதயம் புகுந்த இந்த கலைஞர்களைப் பாராட்டவா?????இல்லை….கலைஞர்களின் திறமையை உணர்ந்த இந்த ரசிகர்களைப்பாராட்டவா???? …நான்கு துளிகள் போதும் கனடிய மனக் கடலில் மகிழ்ச்சி தரும் இனிய நகைச்சுவை அலைகளை எழுப்ப..இவர்கள் துளிகள் தான்இறங்கி நீந்தினால் அழகிய அலைகள் தரும் கடல்கள்…..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்புடன்……… ஜஸ்டின் தம்பிராஜா.