நித்தமொரு
கதா பாத்திரம்.
மாற்றமில்லா
அரங்கங்கள்..
தினமொரு
திரைக் கதை.
வசதிக்கொப்ப
வசனங்கள்..
ஒப்பனையில்லாத
திரு முகங்கள்.
தில்லு முள்ளுடன்
திருகு தாளங்கள்.
ஒன்றாக முடியாத
ஒவ்வாத சிந்தனை.
ஆளுக்கொரு கொள்கை
ஆளுக்கொரு கட்சி..
சத்தமில்லாத
கழுத்தறுப்புக்கள்
சுத்தமில்லாத
அறுவடைகள்..
கருவறை தொட்டு
கல்லறை வரையில்
ஆடாத ஆட்டங்கள்
அர்த்தமில்லாத வாழ்வியல்…
ஆக்கம் கவிஞர்தயாநிதி