—பசும் பாவைகள்—கவிதை அகநேசன்

 

அகத்தின் அன்பை அறியா ஒருசில ஜென்மங்கள்,
அலட்டும் ஆசை வார்த்தைகளுக்கு இரையாகி
அகப்பட்டு அங்கே அல்லல்படும் பொழுதே அந்த
அகத்து அன்பின் அருமை அவர்களுக்குப் புரியும்.
பாவம் அந்த பால் குடி மறவாத பசும் பாவைகள் ,
பாசத்தையும் வேசத்தையும் பிரித்தறியா பிள்ளைகள் .
பகட்டும் பல்லிளித்தலும் பலநாளில்லை என்பதை
பட்டுத்தெளிந்த பின்னரேதான் பலரும் அறிகின்றனர்,

ஆக்கம்அகநேசன்