வேப்பமரம் சாட்சியடி….நான்
விடியுமட்டும் விழிச்சிருந்தேன்-இந்த
குடிலுக்குள்ளே தனிச்சிருந்தேன் -உன்
வடிவழகை நான் நினைச்சிருந்தேன்..
யானைவரும் புலிவரும் பன்றிவரும்-என்று
ஆனமட்டும் நான் முழிச்சிருந்தேன்-இந்த
சேனையிலே தனிமையிலே இருக்கையிலே
ஊர்நினைவும் உன் நினைவும் வாட்டுதடி…
வாடையிலே இருண்டுகொண்டு வருகுதடி
சாடையிலே மழையும் வரப்போகுதடி -நான்
காலையிலே புறப்பட்டு வாறனடி -உன்
சேலையிலே முகம் புதைக்க வேணுமடி
கவிஞர் பாடகர் கோவிலுர் செல்வராஐா