எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் வெகு சிறப்பாக 2ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பி.ப 2மணிக்கு மங்கல விளக்கினை ஏற்றியதோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.அறநெறிப்பாடசாலையின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.மாணவர்களின்ஆடல்பாடல் பேச்சு என விழா களை கட்டி நின்றது பாடசாலையின் சின்னஞ்சிறார்கள் அளித்த பாடல்கள் நடனங்கள் ரசிக்கக்கூடியவையாக இருந்தன இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.நுண்கலைவகுப்புக்களில் பயிலும் மாணவர்களும் தங்கள் திறமையை வெளிக்காட்டத் தவறவில்லை தபேலா மிருதங்க ஆசிரியர்கள்நகுசாந் அனுசாந் ஆகியோரின் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டுஅளித்த மிருதங்க வாத்திய இசை விருந்து மிகச் சிறப்பாக அமைந்திருந்தது கலந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் ரசித்து பாராட்டிக் கொண்டிருந்ததை என் செவிகளால் கேட்க முடிந்தது. சுரத்தட்டு வாத்திய இசை வழங்கிய மாணவர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இனிமையான இசை வழங்கி நின்றார்கள். அவர்களை உருவாக்கிய ஆசிரயர்களுக்கு பாராட்டுக்கள். தனியொருவராக சுரத்தட்டு இசை வழங்கிய யோசுவா அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அவரது இசையில் காணக்கூடியதாக இருந்தது. விழாவில் முத்தாய்ப்பு வைத்தநிகழ்ச்சியாக அமைந்தது பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டதாகும். எழுத்தாளர் இந்துமகேச .கலைவிளக்கு பாக்கியநாதன் அறிவிப்பாளர் பாலா நகைச்சுவை நடிகர் தர்மசோதிராஐன் யெயந்தி நாதக்குருக்கள் விமர்சகர் கிருசனமூர்த்தி ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம் ஆகியோர் இந்த விருதுக்காக தெரிவு வசெய்யப்பட்டிருந்தனர். விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த எசன் நகர பிதா திரு Thomaskufen அவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கி கெளரவித்தார். வாழும்போதே கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட நயினை விஐயன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது இவர் போன்றவர்கள் உள்ளவரை எமது கலையும் கலாச்சாரங்களும் கலைஞர்களும் வாழ்ந்து கொண்டே யிருபார்கள். வயலின் வீணை இசை வழங்கிய கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே இனிமையான இசை வழங்கிசிந்தையை குளிர வைத்தாரகள் .சலங்கை ஒலி நாட்டியாலயத்தின் நடனமணிகள் ஆடிய நர்த்தனம் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது .35நடனக்கலைஞர்கள் இணைந்து சிறப்பித்த இந்நிகழ்வு பார்வையாளர்களின் அமோக கரகோசத்தைப் பெற்றது.நிகழ்ச்சிகள் அனைத்தையும் நயினை விஐயனோடு இணைந்து கேதாரணி பாலா .கார்த்திகா சிவபாதம் கலையரசி ரவீந்திரசிவம் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கிரார்கள். வாழ்க வளர்க எசன் அறநெறிப்பாடசாலை.