தட்டிக்கொடுத்து தரணியை ஆளடா எனத்
தயை கொடுத்த, அந்த தார்ப்பரியங்கள் இன்று,,
விட்டுக்கொடுப்புகளை விடுத்து, வாழ்வை
வீண் வாதங்களால் விரையம் செய்வதுமேனோ ?,
கட்டுப் கோப்பாய் வாழ்ந்த குடும்பங்கள் இன்று
கலைந்து களைத்து காணமல் போவதுமேனோ ?
கூட்டுக்குடும்பங்களாய் வாழத்தேவையில்லை,
கூப்பிட்ட குரலுக்கே ஆளில்லையே, அதுயேனோ?
பட்டுத் தெளிந்து விலகி விட, நாமொன்றும், திரைப்
படங்களில் வரும் வெறும் பாத்திரங்கள் அல்லவே!
விட்டுக்கொடுப்புகள் தான் என்றென்றும் வாழ்வில்,
விலைமதிக்க முடியாத சொத்து என்பதை யாரறிவர் ,
சாந்த நேசன்