உலகம் சுருங்கி
உள்ளம் கைகளில்
தொல்லைகள் பெருகி
வினைகள் விளைச்சல்.
பாசம் பந்தம்
பரிவு பரவசம்
யாவும் மறந்து
நகருது தேசம்..
வேர்களை அறுத்து
திசைளை தொலைத்து
புது வழி தேடி
வந்தவர் கரங்களில்….
விஞ்ஞானம் வளர்ந்து
கை தொலை பேசியாகி
வேரூன்றி வேடிக்கை
காட்டி விபரீதமாகியது..
சாரதி கரங்களில்
வேரூன்றியதால்
சாலை விபத்துக்கள்.
கல்லூரிப் பிள்ளைகள்
கரங்களில் கல்விக்கு கேடு..
அடுப்பங்கரையிலும்
அடிக்கடி அடிப்பிடிப்பு
தூக்கம் கலைப்பு
ஏக்கம் விதைப்பு
வினைகள் அறுவடை…
தேவைக்கு மட்டும்
கைத் தொலை பேசிகள்
கரங்களில் தவழட்டுமே
இதனால் இளையோர்
உலகம் விழிக்கட்டுமே..
கவிஞர் தயாநிதி