கை கோலி நான் சுமக்கும் இந்த
கைப்பிள்ளை எனக்கோ சுமையில்லை .
வைக்கோலின் சுனையது கூட இந்த
தையலின் உடலைத் தீண்டியதில்லை,
மைக்கோலம் நான்கண்டு அவன் மேல்
மையல் கொண்டுஎன் மாராப்பை விரித்து ,
பையில் கருவை வேண்டி நிரப்பியபோதும்,
மெய்யில் எனக்கெந்த கனமும் தோன்றவில்லை ,
கைப்பிடித்துன்னை காலமெலாம் காப்பேன் என
பொய்யாய் அவன் கட்டிய தாலி மட்டுமே,
ஐயோ எனக்கு இன்றும் பாரமாய்த் கிடக்கிறது .
சுமை நேசன்