பெண்கள் ஏன் ஆமையாகவும்,
ஆண்கள் ஏன் முயலாகவும் பார்க்கப் படுகின்றனர்?
ஓட்டை விட்டு வெளிவரும் ஆமையும்
வீட்டை விட்டு வெளிவரும் பெண்மையும் ஒன்றா?
ஓடோடு பிறந்தது ஆமையின் குற்றமா?
பரிணாம வளர்ச்சியில் ஓடற்ற ஆமை
உடும்பானால் ஒத்துக் கொள்வீரே?
பாரம்பரிய வளர்ச்சியில் விடாமுயற்சிப்
பெண்களை வெட்டிக் கொல்வீரோ?
கொன்று தான் பாருமென்,
கொன்ற இடத்தில்,
கோடிப் பெண்கள்,
கோடரியோடு பிறப்பார்கள்.
சிந்தனை சிவவினோபன்.