யேர்மனி கொஸ்லார் „சிவசக்திநர்தனாலயா“ அதிபர்.“நாட்டியகலாபமயில் “ „நாட்டிய கலாஜோதி „ஸ்ரீமதி.மைதிலி கஜேந்திரன் அவர்களின் மூன்று மாணவிகளின் அரங்கேற்றம் ஒரே மேடையில் அரங்கேற்றம் கண்டமை பெருமையும், மகிழ்வுமே. ஈழத்தமிழனின் வரலாற்று பெருமைகளை புலம்பெயர் மண்ணிலும் தடம்பதிக்கும் ஆசிரியர்களையும், இளம்மொட்டுக்களையும் பாராட்டி வாழ்த்தி வரவேற்க வேண்டியது எமது பாரிய கடமையே.
அவ்வகையில் கடந்த 06.10.2018 ( சனிக்கிழமை) கம்பேர்க் மாநகரில் மூன்று மாணவிகளான செல்வி.சஜிகா பாலகுமார், செல்வி.றஸ்மியா பாலகுமார், செல்வி.ரம்யா கஜேந்திரன் ஆகியோரின் அரங்கேற்றம் சிறப்பாக அமைந்திருந்தது. அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் ஸ்ரீமதி.மைதிலி கஜேந்திரன், பாட்டு „மதுரகுரலோன் “ திரு.S. கண்ணன், மிருதங்கம் திரு.S. பிரணவநாதன், வயலின் திரு.ம.தேவராஜா ஆகியோரின் சிறப்பான இசையோடு மூன்று நாட்டிய நட்ச்சத்திரங்களின் அரங்கேற்றம் முப்பெரும் தேவிகள் கண்முன்னே தோன்றி மறைந்த காட்சியாக அமைந்திருந்தது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக லண்டன் சலங்கை நர்த்தனாலய இயக்குனநர்
Dr. ஜெயந்தி யோகராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி . இராஜஸ்ரீ ரமேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். நாட்டிய நட்ச்சத்திரங்களின் புஸ்பாஞ்சலி, விருத்தம், கௌத்துவம், ஜதிஸ்வரம், வர்ணம், பதம், சிவதாண்டவம், ஆனந்த தாண்டவம், கீர்த்தனம், காவடிச்சிந்து, தில்லானா, அத்தனையும் குருவின் கற்றலை கண்முன்னே காட்டி மண்டபம் நிறைந்த சபையின் கைதட்டல்களுடன் நிகழ்வு மகிழ்வாக அமைந்தது..