பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.இந்நிலையில், அவர் குறித்த பல தகவல்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளது.
சின்மயி ஈழத்திரு நாட்டில் யாழ்.குடாநாட்டில் அமைந்துள்ள சாவகச்சேரி – மட்டுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக சிறுவயதில் கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்து தற்போது ரொறன்ரோவில் வசித்து வருகின்றார்.இலங்கையில் நடந்த கொடிய யுத்தம் என்றும் மக்கள் மனதில் ஆராத வடுக்களாகவே இருந்து வருகின்றது.
சின்மயி போல பலர் இலங்கையை விட்டு கனடா போன்ற பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்சிறுமி சின்மயி உலகப் புகழ் பெற்ற திருக்கணித பஞ்சாங்க கணிதரான தென்மராட்சி மட்டுவில் சிவஸ்ரீ கி.சதாசிவ குருக்களின் பேர்த்தி.
‘கம்பன் வீட்டுத் தறியும் கவி பாடும்’என்பது போன்று சின்மயியும் தமிழ் மொழி மீதும் இசைக் கலை மேலும் தீராத விருப்புக் கொண்டவர்.ஈழத்து வேரில் முளைத்த எத்தனையோ செடிகள் புலம்பெயர் தேசங்களில் விருட்சங்களாக கிளை பரப்புகின்றன.அதைப் போன்று சின்மயி இசையில் சிறக்கவும் போட்டியில் வெல்லவும் இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் உறவுகள் சமூகவலைத்தளங்களின் ஊடகாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.