ரசிக்கப்
பழகு.
பாராட்ட
பழகு.
ஏணிப்படியாய்
இருந்து விடு.
முடிந்தால்
தட்டிக் கொடு.
தெரிந்தால்
சொல்லிக் கொடு..
நாக்கு
நாலு பக்கமும்
வளையுதென்று
அதன் புனிதம்
கெடுக்காதே..
அச்சு எழுத்தில்
அகரம் தெரிந்தால்
சிகரம் தொட
எழுதிப் பழகு…
அவரப்படி
இவரிப்படியென
ஏனிப்படி
குழம்பிக் குதிக்கிறாய்
வலிந்து தாக்கி
மலிந்து போகின்றாய்.
சுய விமர்சனம்
செய்து பழகு
அழிவில்லா ஆக்கங்களை
மதிக்கப் பழகு…
நாலு விருப்புக்காக
நாகரீகமிழக்காதே.
நாட்டின் தேவைகள்
விரிந்து கிடக்குது..
விரும்பி பணி
செய்யத் தொடங்கிவிடு..
விரும்பியொருவன்
தொடங்கிய பணிகளை
அரும்பினிலேயே
அழிக்க முனையாதே…
உன் மனநூலின்
தப்பான பதிவுகளே
முகநூலையும்
நாசம் செய்கின்றதை
என்றும் மறவாதே..
26.01.2019.
சொல்ல வேணும்
போலிருந்தது…
கவிஞர் தயாநிதி