வெறுக்க வில்லை!கவிதை சுதர்சன் மட்டு நகர்

மனதை இறுக்கி
இடியினை தாங்கி
வாய்சவாடல்களை
வெறுத்து
கல்லாக்கப்பட்ட
என் மனதை
வார்த்தை கொண்டு
இன்னும் ஏன்
கலங்கடிக்கிறாய்

உனை வெறுக்க வில்லை
ஆனால்
மீண்டும் உன்னால்
என்
வெற்றிடங்களை
நிரப்ப முடியாது

ஆக்கம்  சுதர்சன் மட்டு நகர்

Merken

Merken