ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு.1968 டிலிருந்து

அப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே பெருக ஆரம்பித்தது. திருகோணமலையிலேயே ஆரம்பமான இசைக்குழு திருகோணமலை எங்கள் நாடு மீனிசை பாடி வரும் யாழ்பாடி யாழ்ப்பாணம் போன்ற சொந்தப்பாடல்களை பரமேஸ் இயற்றிப் பாட கோணேஸ் அவர்கள் இனிமையாக இசையமைத்து மேடையேற்றி மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்றனர்.இந்த நேரத்தில் இவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்த முகுந்தராஜா மோகன் ராவ்இ ரஞ்சித்குமார் ஆகியோர்; கனடா வந்தும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவது போற்றத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் ளு.P.மயில்வாகனன் – அப்துல் ஹமித் இன் உதவியூடன் இலங்கை வானொலியில் இசையரங்கு என்ற இசை நிகழ்ச்சியை வாரம் ஒரு முறை (15 நிமிடங்கள்) நடாத்தி ஈழத்திலேயே மக்களின் ஆதரவைப் பெற்றனர். தொடர்ந்து 1969 களில் நான்கு மெல்லிசைப் பாடல்களை எம்.பி.கோணேஸ் இசையமைக்க பரமேஸ் எழுதி பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

எனினும் இலங்கை வானொலி ஈழத்துப் பாடல்களை ஒலிபரப்ப அந்த நேரத்தில் மறுப்புத் தெரிவித்தது. தென்னிந்திய பாடல்களில் மோகம் கொண்டிருந்த இலங்கை வானொலி இதனை இருட்டடிப்புச் செய்ததில் பெரும் ஆச்சரியம் இல்லை. ஆனால் டீ.ஆர். அப்துல் ஹமித் ளு. மயில்வாகனம் விமல் சொக்கநாதன் போன்றௌரின் முயற்சியூடன் பாடல்கள் ஒலிபரப்பிற்கு ஏற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்யப்பட்டன. பாடல்கள் மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்றன. எனினும் இந்த நான்கு பாடல்களும் இசைத்தட்டாக விற்பனைக்கு வெளிவரவில்லை. தொடர்ந்து 1970ம் ஆண்டு பரமேஸ் கோணேஸ் சகோதரர்களால் 45 இசைக்கருவிகளுடன் கொழும்பு சரசாவி கலையகத்தில் எம்.பி.கோணேஸ் இசையமைக்க எம்.பி.பரமேஸ் இயற்றி குரல் கொடுத்த பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. இந்தப் பாடல்களை ஒலிப்பதிவிற்கு வந்த நேரத்தில் பரமேஸ் கோணேஸ் சகோததர்களுக்கு உதவியாக இருந்த பப்பா மிஸ்கின் மிகவும் ஆதரவவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உனக்குத் தெரியூமா நான் உன்னை நினைப்பது
நீ வாழும் இடம் எங்கே
போகாதே தூரப் போகாதே
நீயின்றி நிலவு

இந்த நான்கு பாடல்களும் அதன் பின் இசைத் தட்டாக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பாகி ஈழத்து மக்களை மட்டுமல்ல உலகத்தமிழ் மக்களின் ஆதரவையூம் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து பரமேஸ் கோணேஸின் புகழ் தமிழ் மக்கள் வாழும் இடம் முழுவதிலும் பெருகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதிலும் பல நூறு மேடை நிகழ்ச்சிகளையூம் சகோதரர்கள் அரங்கேற்றினர்.

இந்த நேரத்தில் இவர்களின் இசைக்குழுவில் மு.ளு.பாலச்சந்திரன்இ பாக்கியராஜாஇ நு.சு.பிரேமாஇ துரை துரைலிங்கம்இ மு.சு. கமலா ஆகியோர் இணைந்து பாடி வந்தனர். 1970 முதல் 1977 வரை பரமேஸ் கோணேஸ் ஈழத்திலேயே பலநூறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்த நிகழ்ச்சிகளிலே பாடி பெரும் வரவேற்பைப் பெற்றவர் எம்.பி. பரமேஸ் அவர்களின் காதல் மனைவியூம்இ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சங்கீத பூ~ணம் பட்டம் பெற்றவருமான மாலினி பரமேஸ் அவர்கள். யாருமே எதிர்பாராத விதமாக் சகோதரர்களிடையில் பிரிவூ ஏற்பட்டது. எனினும் சகோதரர் கோணேஸ் அவர்கள் யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்தார். அங்கு இசைக்குழுவை ஆரம்பித்தார். அங்கு அவரிற்கு போதியளவு வரவேற்புக் கிடைத்தது. இந்த நேரத்திலும் பப்பா மிஸ்கினும் இணைந்து நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி வந்தனர்.

இந்த நேரத்தில் எம்.பி.கோணேஸ் அவர்கள் இலங்கை வானொலியில் இசையமைப்பாளராக இணைந்து கொண்டார். இந்த இடைக் காலகட்டத்தில் அவர் பல ஈழத்துப் பாடல்களை இசையமைத்தார். திரும்பவூம பரமேஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பல நிகழ்ச்சிகளை கோணேஸ் அவர்கள் இசையமைத்துக் கொடுத்தார். அதன்பின் நாட்டுப்பிரச்சினை காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சிகளை நடாத்த முடியாது 1983ம் ஆண்டு கோணேஸ் அவர்கள் அவரின் மனைவிஇ பிள்ளைகளுடன் மேற்கு ஜேர்மனிக்கு இடம் பெயர வேண்டி வந்தது.

இந்த நேரத்தில் நாட்டுப்பிரச்சினை மிகவூம் மோசமாக இருந்தது. போராட்டத்திற்கு பெரும் தொகையான பணம் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளையில் அங்கு கலாச்சார பிரிவூக்குத் தலைவராக இருந்த திரு. சுதா அவர்கள் கோணேசை அணுகி சில நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் வரும் தொகையைப் போராட்டத்திற்கு கொடுத்து உதவூம் படி கேட்டிருந்தார். தமது பங்களிப்பாக திரு.கோணேஸ் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவரும் முழுமனதுடன் சிறப்பாக நடத்தி 80 களில் பெரும் நிதி சேகரிப்புக்கு உதவினார்கள். மொத்தம் 36 நிகழ்ச்சிகளை ஜேர்மன் நகரில் நடாத்திக் கொடுத்தார். ஒரு நிகழ்ச்சியிலும் 40 பாடல்கள் கவிஞர் முகில்வாணன் எழுத அதற்கு கோணேஸ் அவர்கள் இசையமைத்து நடத்திக் கொடுத்தார்.

அனைத்து நிகழ்ச்சிகளின் பிரதான அறிவிப்பாளராக திருமதி. பத்மினி கோணேஸ் அவர்கள் பணியாற்றி மக்களின் ஆதரவையூம் பெற்றார். ஜேர்மன் கலாச்சாரப் பிரிவினரின் நிகழ்ச்சியே அவர் முதன் முதலாக அறிவிப்பாளராக பணியாற்றியூள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தொடங்கிய அவரின் ஆரம்பம் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து கோணேஸ் அவர்களின் கலை முயற்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் பல வெற்றிகைள அளித்து வருகின்றன. ஒலி ஒளிபரப்பு ஊடகத்துறையைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற முன்னணிக் கலைஞர்கள் திரு. கோணேஸ் பற்றிக் கூறியிருப்பதிலிருந்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

S