நிழல்படக்கருவி என்னிடம் இருக்கு
நியத்தினை எடுத்திட எதுதான் இருக்கு
ஆதியில் தோன்றிய என்னால் வந்தவர்
ஆயிரம் கதைகள் பேசுகின்றார்
கோமாளி எனவே எம்மை ஆட்டி
குரங்குவித்தை எனப் பெயர் கூறுகிறார்
சீதையை காக்க என் முன்னோர்செய்த
செயல்கள் தன்னை போற்றுகிறார்
சிந்தையில் ராமா என்று சொல்லி
சிறுவர்முதல் இசை பாடுகின்றார்
நாளைய பொளுதில் என்ன நடக்கும்
நாமும் அறிய மாட்டோமோ
நல்லதும் கெட்டதும் இந்தக்கருவியே எடுக்கும்
நாளும்பார்த்து மகிழ்வோமே !
ஆக்கம் இசைக்கவிஞன் எஸ். தேவராசா