ஆறிலிருந்து அறுபதுவரை


ஆறுவயத்துச் சிறுமிகள் முதல்
அறுபது வயது மூதாட்டிகள் வரை,
அன்றாட வாழ்க்கையிலே பற்பல
ஆபத்துக்களை கண்டு ,தாண்டியே,
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள்
அகிலத்தில் வாழ்த்து வருகிறார்கள்.
அஞ்சி ஒடுங்கியே வாழ்ந்து வரும்
அந்த பாவப்பட்ட பெண்ணினத்தை ,
அவமானப்படுத்தி மனதை கொல்வதும்,
அவள்மானத்தை பங்கமிட்டு கொல்வதும்,
ஆண்டாடு காலமாய் நடைபெற்று வரும்
ஆண்களின் பொழுது போக்கானது.
அநியாயத்தை தட்டிக்கேட்கும் பெண்களை
அம்மணமாக்கி தெருவில் விடுவதும்.
அற்ப சுகத்துக்காய் பிஞ்சுகளை ,
அழித்து ,பிரேதங்களாக்கி எறிவதும்
அன்றாட தலைப்பு செய்தியானதின்று.
ஆண்டவன் படைப்பையுன் சாதகமாக்கி
அடிமை சங்கிலியில் பெண்ணை கட்டும்
ஆணாதீக்கரே! ஒன்றைமட்டும் மறவாதீர்,
ஆதிக்க வெறியால் பெண்ணினத்தை
அடிமைப் படுத்தி சுகம் காணும் நீயும்,
அன்னையெனும் பெண்னொருத்தி பெற்ற
ஆண்மகன் என்பதை நினைவு கொள்.
..
மாது நேசன்