வேலை முடிந்து களைத்து
வேர்வை மணக்க மணக்க
வீட்டுக்கு வரும் அப்பா.
*
சேலை கிழிந்தாலும் அதை நன்கு
செப்பனிட்டு சீர் செய்து ,தனை
செழிப்பாக்கி சினக்காது வேலைசெய்து
*
காலை முதல் ஓயாது ஓடியே
கடுகதியாய் இயங்கி நல்ல
கறிசோறு சமைக்கும் அம்மா .
*
மாலை கோர்க்க நல்லமணக்கும்
மல்லிகைப் பூத் தேடித்திரிந்து பறித்து
மங்கலமாய் பூச்சூடி நிற்கும் அக்கா .
*
சாலைவீதியெங்கும் சிநேகிதருடன்
சுற்றிச்சுழன்று பொழுதைப்போக்கி
சாயங்கலமாய் வீடுவரும் அண்ணா.
*
மூலைமுடுக்கும், வீட்டின் முளுஇடமும்
முசுறுபோல அலைந்து ,தேடித்தேடி
முண்டியடித்து திண்டு திரியும் தம்பி .
*
பாலைக் கேட்டுச்சிணுங்கிய படி
பாவையோடு அம்மாவில்த்தொங்கி
பாசாங்கு அழுகை செய்யும் தங்கை .
*
லீலை பலபுரிந்தபடி முற்றத்து நிழலில்
லாவகமாக அமர்ந்து ,வேளைகடத்தும்
லவ்வீகக் குழந்தைகள் தத்தாபாட்டியும்.
*
வாலைச்சுருட்டியபடி பகல் முழுதும்
வாசலிலே கிடந்தது காவல் காக்கும்
வைரவன் எம்வீட்டு நன்றியுள்ளநாயும் ,
*
நாளை விடியும்வரை இன்றையநாளின்
நல்ல நினைவோடு மட்டுமே வாழ்ந்த
நடுத்தரவர்க்க வாழ்வு தந்த சுகமே தனி .
*
கூளைக்குடித்தாலும்,கஞ்சியின்றியானாலும்
கூரை விட்டுக்குள் கிடைத்த அந்த சுகம்,
கோடிகொடுத்தாலும், மாடி விட்டில் இல்லை,
குடிசைநேசன்.