ஒத்தையிலே நிற்கிறியே
ஒத்தாசையா நான் வரவா- என் சித்திரமே
குத்தமென நினைக்கிறியே
கூச்சலிட்டு முறைக்கிறியே -என்
அத்தை பெத்த அற்புதமே
கள்ளிச்செடி காடு எல்லாம்
உன்பெயரை எழுதி வெச்சேன்
சொல்லிக் கொள்ள தோதில்லாமல்
சோகத்தில நானலைஞ்சேன்
பல்லுக்குத்தும் போது கூட
பக்கபலம் ஒன் நெனப்பு புள்ள
சொல்லுக்கெனை நீ மறுத்து
சோதிக்கிறியே நல்லதல்ல
ஊக்கு வச்சி பார்வையில்
என்னை நோகடிக்க வைக்கிற
சாக்கு போக்கு சொல்லி
தினமும் என்னை சாகடிக்க வைக்கிற
சொந்தமென்று யாரிருக்கா
சொல்லிக் கொள்ள உன்ன விட்டா
சொன்னதில தவறிருக்கா
தள்ளி நீதான் ஏனோ நிக்கா
ஒத்தையில நீயும் போக
ஒட்டிக் கொள்ள எண்ணிக் கொண்டேன்
ஒத்துக்கொண்டு வாயேன் புள்ள
நான் வைத்து கொள்வேன் உசுருக்குள்ள
கல்லு நெஞ்சுக்குள்ள
நான் தானே சொல்லுபுள்ள
கண்ண மூடி தூங்கயிலே
தினம் நீ தானே வாறாபுள்ள
மூச்சிவிடும் வேளையிலும்
முன்னூரு முறை உனை நினைகேன்
இப்படி முக்காடு போடுறியே
நான் இனி எக்காட்டில் போய் விழுவேன்
கவித்தென்றல் ஏரூர்