ஜெர்மன் „அகரம் „சஞ்சிகையின் தலைமை ஆசிரியரும், E,T.R வானொலியின் இயக்குநருமான திரு.த,ரவீந்திரன் (ரவி மாஸ்ரர்) அவர்கள்!!
ஜெர்மனியிலிருந்து ஐரோப்பா எங்கும் 8ஆண்டுகளாக வெளிவரும் அகரம் மாத சஞ்சிகையின் முதன்மை ஆசிரியரும், ஐரோப்பா தமிழ் வானொலி (E,T,R) வானொலியின் இயக்குநர் நாயகமுமான திரு.ரவீந்திரன் (ரவி மாஸ்ரர்) அவர்கள் எனக்கு நண்பர் வானொலித்தென்றல் N.T,ஜெகன் அவர்கள் மூலம் அறிமுகமானவர்.அதுவும் T,R,T வானொலியின் ஜெர்மன் „உறவுகளின் சங்கமம் „கலைநிகழ்வுக்கு பலவகையில் உதவியவர். அது 1998 அல்லது 1999 என்று ஞாபகம்.
அதன்பின்னர் பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பான A,B,C வானொலியூடாக அவரது தமிழ்சேவை தொடர்ந்தது .அதன் பின்னர் ஜெர்மனியில் ஐரோப்பா வானொலி ஆரம்பித்து தற்போது 14 ஆண்டுகள்.
அடுத்து அரசியல், சமூக,கலை,இலைக்கிய மாதச் சஞ்சிகையான „அகரம் „என்ற இதழை ஆரம்பித்து 8ஆண்டுகள்.
„அகரம் „சஞ்சிகை சிறப்பான உள்ளடக்கத்துடன் அழகான வடிவமைப்பில் இலவசமாக ஐரோப்பா நாடெங்கும் தேடிப்படிக்கும் நம்மவர் தமிழ் சஞ்சிகையாக வாசகர் மத்தியில் மங்காத புகழுடன் சிகரம் தொட்டு நிற்கிறது.
அதற்கு காரணமான ரவி மாஸ்ரர் அவருடன் இணைந்த ஆசிரியர் குழு ஆளுமைகளும் பாராட்டுக்குரியவர்கள்.
அதேநேரம் எனக்கு பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் பாரிஸில் பாராட்டு விழா எடுத்தபோது அகரம் சஞ்சிகை ஒரு பக்கத்தில் எனது சிறப்புக்களை எழுதி கௌரவப்படுத்தியிருந்தார்கள் இத்தருணத்தில் முதன்மை ஆசிரியர் திரு.ரவீந்திரன், திரு.வண்ணைத்தெய்வம், மற்றும் ஆசிரியர் குழுவிலுள்ள அனைவருக்கும் நன்றிகள்.
அதுமட்டுமா?:: இவ்வளவு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவர்கள் புலம்பெயர் தேசத்தில் இந்து மதத்தின் சிறப்புக்கள் அழிந்து போகாமல் காக்கும் வகையில் „அகரதீபம்“என்ற ஆன்மீக காலாண்டு இதழையும் வெளியிட்டு சேவையாற்றுகிறார்கள். இந்த இடத்தில் இவர்களுக்கு உதவும் வர்த்தகப்பெருமக்களும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
திரு.ரவீந்திரன்(ரவி மாஸ்ரர்) அவர்கள் எல்லாத்திலும் வல்லவராக இருப்பது அவரை வெற்றியாளராக்கியிருக்கிறது.
மற்றவர்களுடன் பழகுவதில் எளிமை, இனிமை!
அத்தோடு இதழியலாளர்,வானொலி அறிவிப்பாளர்,நிகழ்ச்சி தயாரிப்பாளர்,சிறந்த மேடைப்பேச்சாளர்,சிறந்த மக்கள் தொடர்பாளர்,சிறந்த நிர்வாகத்திறன்மிக்கவர் இத்யாதி! இத்யாதி!
எல்லோரும் எல்லாம் செய்லாம் ஆனால் அதை சீராகச் செய்தால் தான் வெற்றி கிட்டும்.
அதை சரியாகச் செய்து வெற்றி கொடி நாட்டி நிற்கிறார் ரவிமாஸ்ரர் (ரவீந்திரன்) அவர்கள்! பாராட்டுகள் இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.
ரவீந்திரன் சிறப்பு பற்றி தொட்டதும் அதில் விடுபட்டதுமிருக்கு அவை இன்னுமொரு தருணத்தில் பதிவாகும். (K.P.L)31.03.2018