எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!- இந்துமகேஷ்

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி
மூத்த மொழியல்லவோ – புகழ்
சேர்த்த மொழியல்லவோ – எங்கள்
பாவலர் கோடியாய் பாமாலை சூடியே
காத்த மொழியல்லவோ – எழில்
பூத்த மொழியல்லவோ

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!

விண்ணோடும் மண்ணோடும் வேதங்கள் தம்மோடும்
வாழும் மொழியல்லவோ – எழில்
சூழும் மொழியல்லவோ – அந்தத்
தென்னாடும் ஈழவர் நம்நாடும் தீபமாய்
ஏற்றும் மொழியல்லவோ -புகழ்
சாற்றும்மொழியல்லவோ

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!

வாயார நெஞ்சார வாழ்த்தியே நாமெல்லாம்
வண்ணத் தமிழ் படிப்போம் -கவி
சொல்லும் தமிழ் படிப்போம் – இந்த
வையத்து மாந்தர்க்கும் எங்கள் தமிழ்சொல்லும்
வார்த்தையைச் சொல்லி வைப்போம் – அதன்
மாண்பினைக் காத்து நிற்போம்

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!
என்றென்றும் வாழியவே!