தமிழ் மண் விடுதலையின் வீரியத்துக்கு வித்திட்ட இலச்சியப்புருஷர் முன்
சத்தியம் செய்யும் தேசியநாள்.
தமிழன் என்ற
ஓர் இனத்தின்
அடையாள நாள்
மாவீர் மனங்களை குழியிருந்து எழுப்பி கொண்டாடும்
புனிதநாள்
மாவீரர் நினைவு நாள் .
உதிரத்தில்
நெய் உருக்கி இதையத்தில்
தீவளர்த்து. கண்ணிரெண்டில் தேடுறோம்
விடுதலை வெளிச்சம் .
மூச்சடக்கி உயிர் கொடுத்தோம்
பேச்சிழந்த
தமிழை
உலகம் உச்சரிக்க .
தோற்றுவிடவில்லை தோல்விகளே இல்லை இலச்சியக்கனவுகளில் ஓய்ந்தவரும் இல்லை. வித்துடலாய் விழுந்தபோதும் வீறுகொள்ள
துடிப்பவரை
விளக்கு ஏந்தி
துதிக்கும் நாள்
மாவீரர் நினைவுநாள் .
சத்தியம் சாகாது இலச்சியத்தில் உயர்ந்தோரை
காலம் கடத்தாது
காற்று உச்சரிக்கும் இன்றல்ல நாளையல்ல என்றைக்கும்
தமிழர் எம் மறையாய் கல்லறை இறையாய் வாழும் தெய்வங்களை காந்தல் மலர் இட்டு காணிக்கை செய்கிறோம் உம் இலச்சியம் தாங்கியே சத்தியம் செய்கிறோம் அமைதியாய் தூங்குங்கள்
காலம் எமை விட்டு
கடந்து போகாது
மாவீரரே விடிவு
எம் கையில் …
வே.புவிராஜ்…