மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2023

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை, நாடகங்கள் என்று எழுதி வாசகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த கலைஞர்.

இவர் 80 பதுகளில் தாயகத்தில் இருந்து புலம்வந்தபின் தன்பணியை தொடர பூ வரசு எனபெயர் இட்டு கையெழுத்துப்பிரதியாக தொடங்கி பல எழுத்தாளர்களை யேர்மனி,மற்றய நாடுகளில் வளர்த்து பின்  பூ வரசும் கணனி பதிவாய் வெளிவந்தது.

பின் பல ஆண்டுகள் பயணித்த எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அடங்காதவை, அதைவிட ஆண்டுதோறும் கலை நிகழ்வின் மூலம் நுாற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்க களம் அமைத்தகலைஞர் தான் மூத்தகலைஞர் இந்துமகேஸ்.

அமைதியா இருந்து அன்பாக பளகி பண்புற செய்யும் பல்துறைக்கலைஞர் பக்திமான்,பிறேமன் நகரில் கலைமன்றம் உருவாக இவரும் காரணி, ஆலயம் உருவாக இவரின் பணி நிறைய.

ஆனாலும் அமைதியின் நீரோட்டம் சல சலப்பில்லாத இவர் 17.01.2019 இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,கலையுலக நண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இவர் எழுத்தாளராக, கவிஞராக, நெறியாழ்கையாளராக பன்முகத்திறன் கொண்ட கலைஞராக வாழ்ந்து வருவதுடன் நாட்டுப்பற்றாளராகவும் நிமிர்ந்து நிற்கின்ற சிறந்த கலைஞர் ஆவார்.

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களை அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

வாழ்வில் சிறப்புற்று நிற்கும்
மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள்
வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert