திருக்குறள், மனித வாழ்விற்கு வழிகாட்டும் உலகப் பொதுமறை. தமிழர் வாழ்வின் இலக்கணம் திருக்குறள். பெரும் சிறப்புவாய்ந்த திருக்குறளை, நம்பிள்ளைகள் அறிந்தும், படித்தும் பயனடைய வழிகாட்டும் நோக்கில் நடாத்தப்படும் போட்டியே, திருக்குறள் மனனப் போட்டியாகும். இப்போட்டியில் பிள்ளைகளைப் பங்குகொள்ளச் செய்து, திருக்குறள்வழி வாழ வைப்பதற்கும், தமிழ்க் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் பெற்றோர்களும், பெரியோர்களும் ஒத்துழைக்க வேண்டுகின்றோம்.
ஒவ்வொரு பிரிவில் பங்குபற்றும் பிள்ளைகளில் கூடிய புள்ளிகளைப் பெறும் மூவருக்கு, முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படும். பங்குபற்றிய யாவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
போட்டிகள் 2022.11.19ந் திகதி டோட்முண்ட் நகரத்தில் நடைபெறும். இடம், நேரம் பின்பு அறியத்தரப்படும். முடிவுகள் யாவும் அத்தினமே அறிவிக்கப்பட்டு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்படும்.
விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தி போட்டிக்கான அனுமதிக் கட்டணத்தையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும். (ஒருவருக்கான கட்டணம் 12,- ஒயிரோ. குடும்பத்தில் ஒரு பிள்ளைக்குக் கூடுதலானவர்கள் பங்குபற்றும்போது, முதலாவது விண்ணப்பத்தாரர் தவிர்ந்த மற்றவர்களுக்கு முறையே 6.- ஒயிரோ) விண்ணப்பம் அனுப்பும் போதே பணம் அனுப்புதல் வேண்டும்.
போட்டிக்கான விபரங்களையும், விதிமுறைகளையும் நன்கு கவனித்து கொள்க. பிரிவுகளுக்கான வயதுக்கணிப்பை, போட்டியின்போது உறுதிப்படுத்த வேண்டும். அந்தந்த வயதுப் பிரிவுகளுக்குரிய குறட்பாக்களையே மனனம் செய்தல் வேண்டும். விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தி 2002.10.10ந் திகதிக்கு முன் அனுப்பி வைத்தல் வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:
பணம் அனுப்ப வேண்டிய வங்கி விபரம்: P.Srijeevaghan
Ponnthurai Srijeevaghan Kuhlmannsfeld 49
Bank:- Ing-Diba AG, Frankfurt am Main 45355 Essen |