பிரிவுகள்! கவியோடு-மயிலையூர்இந்திரன்

புரிந்துகொள்ளாதவர்
பிரிந்து போவதால்
கவலை கொள்ளாதே
நீ பழகியது
வெறும்வேஷம் போட்டவரோடு
என்றுதெரிந்துகொள்
வாழுங்காலத்தில்
சொந்தங்களும்
நட்ப்புக்களும்
கூட்டலும்கழித்தலும்தானே
சிலவேளை பிரித்தலும் வரும்
இதுதான் வாழ்க்கை
துன்பமும்துயரமும்வரும்போது
ஆறுதல் கிடைக்குமென்று
நீ நம்பியதும் நம்பிப்பேசியதும்
உன்குற்றமே
என்பதைப்புரிந்துகொள்
இங்கே நீவிழும்போது
சிரித்தார்கள் பாத்தாயா
நாளை அவர்விழும்போது
நீ சிரிக்காதே ஏன்என்றால்
நீ உண்மையானவன்,
அந்தவலியை நீ உணர்ந்தவன்
உன்னோடு கூடவருவது
ஒன்றுமில்லை ஏதுமில்லை
என்பதை அறிந்துகொள்
காலம்மாறிப்போச்சு
இங்கு எல்லாமே வேஷமாச்சு
மண்ணில் வந்தகாலம்தொட்டு
விண்ணில்போகும் வரை
எத்தனை மானிடப்பேய்களை
சந்தித்து வலிசுமந்தோம்
அவமானப்பட்டோம்,
நோய்கண்டோம்
நம்மைவருத்தியவரை
நம்மை நம்பாதவரை
நம்மை பிடிக்காதவரை
பிரிவது இருக்கும்
கொஞ்வாழ்வுக்கு ஆறுதலே
அன்பைமறந்தவரோடு
பண்பை இழந்தவரோடு
வாழ்வது எப்படிச்சாத்தியமாகும்
மனிதனாகப்பிறந்து
மிருகமாகவாழுபவரோடு
எப்படி கூடிவாழ்வது
இங்கே பிரிவு வேதனைதான்
ஆனாலும் என்ன செய்வது
இதுவும் விதியாச்சோ!
யார் செய்தபாவமாச்சோ!
(கவியோடு-மயிலையூர்இந்திரன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert