ஈழத்தில் கண்ணகிக்கு விழாக் காலம் இது.குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணகி கோயில்களில் ஆண்டுக்கு ஒரு முறை கதவு திறந்து ஒரு வாரச் சடங்காகாக கொண்டாட்டத்துக்குரிய காலம் இது.
வெறும் சடங்குகளுடன் நின்று விடாமல் கலைப் பெரு விழாவாக காலம் காலமாக தொடர்கின்றன.
ஒவ்வொரு நாள் சடங்குகளிலும் கூத்துக்கள் அரங்கிடப் படுகின்றன அலங்கரிக்கப் பட்ட வட்டக் களரியில் பல் வகைக் கூத்துக்கள் இந்த மண்ணின் கலையாக மகிழ்வின் கூடலாக அமைகின்றன.
கன்னங்குடா கண்ணகி அம்மன் கோயில் சடங்குகள் அங்கு ஆடப் படும் கூத்துக்கள் ஒரு கூத்துப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் நீட்சியையும் சொல்லி நிற்கின்றன.
நாகமணிப் போடி அண்ணாவியார்,பாலகப்போடி அண்ணாவியார்,நல்லதம்பி அண்ணாவியார் என ஒரு மரபின் தொடர்ச்சொயை நாம் காண முடியும் இந்த ஆண்டிலும் தொடர்ச்சியான கூத்து ஆற்றுகைகள் இன்று முதல் கன்னங்குடாவில் பெரும் கூத்து விழாவாக கொண்டாடப் படுகிறது.
களரி நிறையும் கூத்துக்கள்
6.6.2022 திங்கட்கிழமை- பீஸ்மர் அம்புப் படுக்கை(வடமோடி) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகம்
அண்ணாவியார்- கதிர்காமநாதன்
ஏட்டண்ணாவியார்- அருணன்
7.6.2022 செவ்வாய்க்கிழமை- பவளக்கொடி(வடமோடி) மண்டபத்தடி மலைமகள் கலைக்கழகம்
அண்ணாவியார்- பரமானந்தம் எட்டண்ணாவியார்- சுந்தரலிங்கம்
8.6.2022 வியாழக்கிழமை- அமிர்த சம்பவ வல்லி (வடமோடி) குருஞ்சாமுனை கலைஞர்கள் அண்ணாவியார்- கதிர்காமநாதன் ஏட்டண்ணாவியார்- சண்முகநாதன்
9.6.2022 வெள்ளிக்கிழமை- பரசுராமன் யுத்தம் (வடமோடி)
கண்ணகி முத்தமிழ் மன்றம் கன்னங்குடா கலைஞர்கள் அண்ணாவியார்- பசுபதி ஏட்டண்ணாவியார்- சதாசிவம்
10.6.2022 சனி
அனுருத்ரன் (தென்மோடி) எண்ணம்பால புவல் கிராம மக்கள் அண்ணாவியார்- பசுபதி ஏட்டண்ணாவியார்- சதாசிவம்