உடம்புக்கும் உடைகளுக்கும்
உரச உரசவே நீயோ நிரையாய்
வந்து அழுக்கைபோக்குவாய்
இப்ப உன்னை வாங்கவோ
நாங்கள் நிரைநிரையாய்
வரிசைகட்டி நிக்கிறோம்
உன்ரை விலையை இப்ப
கேட்டாலே தலையை சுத்திவிழுகிறம்
உன்னை இன்னும் கூடவிலைக்கு விக்கலாம் என்று கடைக்காரரும் பதுக்கிவைக்கினம் கடவுளே கடவுளே
இது என்னகாலமோ கொடுமையோ
யார் செய்தபாவமோ
காசு உள்ளவனோ
உன்னை வாங்கிக்குவிக்கிறான்
வாங்கி நல்லாத்தேச்சுக்குளிக்கிறான்
கூலிவேலை செய்பவனோ
விலையைக்கேட்டு ஏங்கித்தவிக்கிறான்
நறுமணம் வீசவே விதவிதமாய் சோப்புப்போட்ட காலம் போச்சுதோ
எத்தனை விதமான பெயரோடும்
வாசத்தோடும் வந்தாலும்
எங்கடை ராசாத்தி நீலக்கட்டியான மில்வைற்தானே ஏழைகளின் நண்பி
உன்னை மறக்கமுடியுமோ
சீலை தோய்க்கிறகல்லிலை
உடுப்புக்கு உன்னை உரஞ்சி
அடிச்சுத்தோச்சு அலம்பியபின்
கொடியிலை காயப்போடுவம்
சவுக்காரக்காறிக்குமதிப்புத்தான் இப்ப காசு மெத்தினதாலை
உடுப்பு தோய்க்க இயந்திரம் வந்து
உன்னைச்சிலபேர் மறந்துபோட்டினம்
இப்ப கறண்டு இல்லாதபடியால்
உன்னைத்தேடுகினம்
நாங்கள் எப்பவும் உன்னைமறக்கேல்லையடி
நீ ஏழைகளின் நண்பிதானே
சவுக்காரக்காறிக்கு எப்பவும் மதிப்புத்தான் போடிகள்ளி மில்வைற்
(கவியோடு மயிலங்காடுஇந்திரன்)