நீதிபதிகளே
சட்டத்தரணிகளே
நீதிமான்களே
படித்தவர்களே
சட்டம் படித்தவர்களே
குற்றம் அறிந்து
நீதி சொல்லும் நீதிமான்களே
எத்தனையோ வழக்குகள்
பலகாலமாக பல ஆண்டுகளாக தீர்க்காமல் நிலுவையிலே
இருப்பது ஏனோ?
கண்முன்னே கொலை கொள்ளை செய்தவனோ விடுதலையாகி
வீதியிலே துணிவோடு உலாவுகின்றான் எப்படி
பலலட்சம் பணம் வாங்கிவிட்டு
சட்டத்தரணிகள் கொலையாளிகளை காப்பாற்றிவிடுவது நீதியா?
வழக்குகள் பலதவணைகள் கொடுத்து
இழுத்தடிப்பதன் நோக்கம் என்ன?
ஒவ்வொரு தவணைக்கும் வக்கீலுக்கு பணம் கட்டமுடியாது
கதிரையில் இருந்து விசாரணை செய்து நீதி சொல்லக்கனகாலம் எடுக்குமா?
ஊருக்குள் இருக்கும் படிக்காத சிலபெரியவர்கள் ஊர்ச்சண்டைகளை உடனே தீர்த்துவைக்கின்றார்கள்
நீதியாக தீர்ப்பு வழங்குவார்கள்
ஆனால் நீங்களோ இழுத்தடிப்பு
படித்துமுடித்து நீதியைக்காப்போம் என்று சட்டப்புத்தகத்தில் கைவைத்து சத்தியம் செய்துவிட்டு பல இலட்சம் வாங்கிவிட்டு
கொலையாளியை காப்பாற்றுவது நீதியோ!முறையா!சொல்லுங்கள்
கையும்களவுமாக பிடிபட்டவன்
சட்டத்தரணிகளால் காப்பாற்றப்படுவது ஞாயமா?
நீதி கிடைக்கும் என்று ஏமாந்துபோனவர்கள் ஏராளம்
நீதிக்காக வாழாமல்
பணத்துக்காக வாழ்ந்தால்
நாடு எப்படி உருப்படும்
நாளையசமுதாயம் எப்படி நல்வழிநடக்கும்
உங்கள் நீதியானதீர்ப்பிலேதான்
நாட்டின் ஒழுங்குகள்,அமைதிகள் நிறைந்திருக்கு
வாள்வெட்டு,கொள்ளைகொலை
காணி அபகரிப்பு இவர்கள் நீதியின் முன் நிறுத்துங்கள் கடும்தண்டனை வாங்கிக்கொடுங்கள்
அப்பத்தான் நாட்டில் அமைதிநிலவும் அன்புமலரும்
(மயிலங்காடுஇந்திரன்)