ஆழத்தெரியாத அரசனால்
அழகான நாடு அலங்கோலமாகுதே
அன்பைத்தொலைத்துவிட்டு
ஆணவத்தோடு அரசாளமுடியுமா
நாட்டில் கொள்ளையும் கொலையும்
பட்டினியும் பஞ்சமும்
நிறைஞ்சே போச்சுதே
தமிழ் சிங்களம் முஸ்லீம்
என்று பிளவுபடுத்தி
பகைமையை உருவாக்கி
நாட்டைச்சீர்குலைத்தார்களே
பாவியர்கள்
மக்கள்படும் துயரம் அறியாது
மாளிகையில் கூத்தும்கும்மாளமும்
ஆட்டமும்பாட்டும்
மனிதநேயம் எங்கே தொலைந்தது
சீனாவிடம் கடன்
இந்தியாவிடம் கடன்
நாட்டையே நாசமாக்கியபாவியர்களே
உங்களை உங்கள் இனமே
கல்லால் எறிந்துகொல்லும்
அப்போது புரியும் தமிழனின்
உண்மையான தர்மயுத்தம்
இனத்துவசத்தோடு
வாழும் அரசிடம்
அன்புஇரக்கம்பண்பு
இருக்காது
அப்படி இல்லாதவர்களுக்கு
மக்களை ஆழ்வதற்க்கு தகுதி கிடையவேகிடையாது
நீதிக்கானபோராட்டத்தை அறவழிப்போராடத்தை
அடித்துநொருக்கிய
நீதியில்லாச்செயலை
யார்தடுப்பது
குரங்கிடம் கிடைத்த அப்பம்போலே
நாட்டைப்பிரித்து
பங்குபோடுவதும்
வளங்களை தாரைவாத்து
கொடுத்து நாசமாக்குவதும்
செயலாகிப்போச்சு
இராணுத்தின் கெடுபிடிகள்
காவலர்களின் கெடுபிடிகள் இன்னும் ஓயவேயில்லை
நீதி செத்துப்போச்சு
இதைக்கேட்க்கவோ
ஆளில்லாமல்ப்போச்சு
எங்கள் அழகியநாடு
அலங்கோலமாச்சு
ஆழத்தெரியாதவர்ளால்
நாடுநாசமாச்சு
(மயிலங்காடுஇந்திரன்)