கால் புதைய நான் நடந்த மண்ணே..உயிர்
வாழும்வரை நான் மறவேன் உன்னை,,,தாய் மண்ணே
என் தேசம் பிரிந்தே நான் வாடுறேன் இங்கே
சந்தோசம் இழந்தே நான் வாழுறேன்.
காலைவெயில் இதமளிக்கும்
கடலலையில் படகுவரும்..
கோவில்மணி ஓசை எங்கும் கேட்கும்
சாலையெல்லாம் விழித்து விடும்
வேலைகளும் தொடங்கிவிடும்…
தாய் நிலமே உனது மணம் வீசும்
ஊர் முழுதும் உன்னைப் பற்றி பேசும். அதுவொருகாலமம்மா .அன்று உன்னோடு இருந்தனம்மா…
இன்று உனை நினைத்து பாடுகின்றேன் அம்மம்மா என் மண்ணம்மா
பாலையடி வட்டைக்குள்ளும்
பள்ளவெளி காணிக்குள்ளும்
பாடுபடும் மக்கள் குரல் கேட்கும் நன்கு கேட்கும்
பாட்டு ஒன்று காற்றில் வரும்
பட்டதுன்பம் நீங்கிவிடும்
நாற்றுநடல் நல்லபடி நடக்கும்
பச்சை வயல் பார்த்து மெல்ல சிரிக்கும்..
அதுவொருகாலமம்மா .அன்று உன்னோடு இருந்தனம்மா…
இன்று உனை நினைத்து பாடுகிறேன் அம்மம்மா
என் மண்ணம்மா
விஞர் கோவிலுர் செல்வராஜன்