ஆயிரமாயிரம் கனவோடு
வாழ்வில் எத்தனை சுமைகள்
ஒரு தாய்க்கு-அப்பாடா
சுமைகள் அவளுக்கு
என்றும் சுகமானது
நான்சுமப்பது
எதிர்காலச்செல்வங்களை
என்ரை தங்கங்களைச்சுமப்பது
எப்படி எனக்கு சுமையாகும்
அம்மாவின் இடுப்பும்,தோழும்
மடியும் பிள்ளைகள் விளையாடும்
ஆனந்தச்சுகம்தரும் இடங்கள்
கையிலே சிறுபையிலே பிள்ளைகளுக்கு,தின்பண்டமும்,
விளையாட்டுபொருளும்
தாங்கியபடி ஒருதெய்வத்தாய்
நாளைய நம்பிக்கையை
நெஞ்சிலேதாங்கி நடக்கின்றாள்
இவளுக்கான விடிவே இந்தக்குழந்தைகள்தான்
என்உயிரும்,உடலும்
என்வாழ்வும் என்வசந்தமும்
என்பிள்ளைகளுக்காகவே
என்றே ஒருதாய் சுமக்கின்றாள்
என்ரைபிள்ளைகளே
நீங்கள் வளர்ந்து பெரிதாகி
இந்த உலகம் போற்றவாழவேண்டும்
என்றநம்பிக்கையோடு
இரண்டு வைரங்களை
சுமந்து நடக்கின்றாள்
துன்பம்துயரம்,வேதனை அவமானம்
எத்தனை எத்தனை தாங்குவாள்
தாண்டியே மெளனமாய் நடப்பாள்
மனையை ஆளுகின்ற மனையாள்
மண்ணில் வந்ததெய்வம்
மகளாய்,மருமகளாய்,
மனைவியாய்,தாயாய்
பலவடிவம் எடுத்து குடும்பத்தை
காக்கும் குலதெய்வம்தான் தாய்
மண்ணிலே வந்த
ஆதிபராசக்திதான் அம்மா
குழந்தைகளே,பிள்ளைகளே
உங்கள் அம்மாவை கண்கலங்க
விட்டுவிடாதீர்கள்
அனாதையாக்கிவிடாதீர்கள்
ஆயிரம் கோயிலுக்கு
போனாலும் கிடைக்காதவரம்
உன்தாயின் காலடியில் கிடக்கின்றது
தன்பிள்ளைகளுக்காக ஒருதாய்பட்டகடனை,வேதனையை
பிள்ளைகளால் தீர்க்கமுடியுமா
முடியாது முடியவேமுடியாது
ஒவ்வொரு குழந்தை
பிறக்கும்போதும்
ஒருதாய் செத்துத்தான்
உயிர்கின்றாள்
மறுபிறவி எடுக்கின்றாள்
பத்தியமிருந்து,நித்திரைமறந்து
தன்சுகமிழந்து,பக்குவமாய்ச்சுமந்து
பெற்றெடுக்கும் தாயை
கவனமாகப்பாருங்கள்
கவனித்துக்கொள்ளுங்கள்
தாயை கும்பிடுங்கள்
அம்மாதான் தெய்வம்
பிள்ளைகளே
இதை உணருங்கள்
வாழ்வில் உயர்வீர்கள்
இது சத்தியவாக்கு
(மயிலங்காடுஇந்திரன்)