16/01/2022 அன்று யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டினால் நடாத்தப்பட்ட “முத்தமிழ் விழா” நிகழ்வில், பாசையூர் மண்ணின் மைந்தன் “ அண்ணாவியார் பஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்” ( Alfred ) அவர்களுக்கு, நாட்டுக்கூத்து கலையின் ஆற்றலை பாராட்டி “அரசகேசரி” விருது வழங்கி கெளரவிக்கபட்டதையிட்டு பெருமை கொள்கிறோம்..!மகிழ்வுடன்,லண்டனிலிருந்து அழகுமணி சூரியர் குடும்பத்தினர் .உங்கள் முன்னவருடன்… பின்னவரும்….உங்களால் மகிழ்வு கொண்டு நிற்கிறோம்….!யாழ் மா நகர்…முத்தமிழ் விழாவில் மூத்தோனுக்கு…விருது….!தமிழ் கலையுலகில்… யாழ்பாணம் பாசையூரின் கலை மகன்….ஜேக்கப் அல்ப்பிரேட் எனும் மா பெரும் கலைஞனுக்கு அரசகேசரி விருது…..!பாசையூர் மண்ணின் மைந்தனுக்கு…வல்லமை மிக்க கலைஞனுக்கு….மரபு வழி தோன்றலுக்கு….பாரம்பரியமிக்க மூத்தோனுக்கு…..,ஆன்றோரும் சான்றோரும்…கல்வியாளரும் கலை சார் மாந்தரும்…கூடி….நாட்டு கூத்தின் பொக்கிஷம்…ஏழிசை மன்னன்…. உச்ச ஸ்தானியின் பாடகன்… அண்ணாவி பரம்பரை வழித்தோன்றல்… சிறந்த வாத்திய கலைஞன்… நூற்றுக்கு மேற்பட்ட நாடங்களில் நடித்த சிறந்த நடிகன்… கல்லூரிகளிலும்… பாடசாலைகளிலும்… ஊர்களிலும் கூத்து கலையை பழக்கிய ஆசான்….சிறந்த அண்ணாவியார்….போன்ற திறமை கொண்ட… ஆற்றல் மிக்க கலைஞன் என….வழங்கிய உயரிய விருது….!ஐந்தாவது தலைமுறை கலைஞனையும் கண்டு மகிழ்ந்த பேறே….உங்களை என்றும்… ஊர் போற்றும்….உறவு போற்றும்….பார் போற்றும்….பரம் பொருளும் வாழ்த்தும்…!வாழிய… வாழிய… வாழிய.. உங்கள் உடல் வளமும்…. குரல் வளமும்…. உங்கள் நல் மனம் போன்று வாழியவே…..!