கவிஞர் முகில் வாணன் இன்பத்தமிழ் பெரும் புலவர்அனைவருக்கும் பிள்ளைத்தமிழால் வாழ்த்துகின்றார்

இன்றைய அரங்கினிலே
இன்பத்தமிழின் இனிமையை,
இனிக்கஇனிக்கக் கனிச்சாறாய்,
பிழிந்து எடுத்து எமக்கு அளித்த
பெரும் புலவர்அனைவருக்கும்
என் பிள்ளைத்தமிழால் வாழ்த்து.
2
கொந்தவிழும் மலர்ச்சரத்தை
கூந்தலிலே சூடி வரும்
நந்தவனத் தொன்றல்போல்
நம் ஈழப் பெண்களெல்லாம்,
Sts சின் காற்றலையில்
இசைந்து நடமாடக்கண்டேன்.
3
கற்கண்டு சொற்கொண்டு
கற்பனையில் மிதந்தவரின்
அற்புத வரிகளை ரசித்து ரசித்துக்
குடித்துக் குடித்து வெறித்தேன்.
4
அவர் சொன்னார் இவர் சொன்னார்
என்பதையும் தாண்டிச்சிலர் சொன்ன
கற்பனை வரிகளில் எனை மறந்தேன்.

என்னுடலைத்தாங்கியுள்ள
மண்ணைமறந்தேன்.
எண்ணச்சிறகெடுத்து
Stsசின் காற்றலையில்
இவர்பின்னே நானும்
கவிநுகரப் பறந்துசென்றேன்.
5
என் சித்தம்
இனிக்கும் வண்ணம்
செந்தமிழ் கவிதந்த
இன்றைய புலவர்கள்
அனைவரும்
எனக்கு ஆசான்கள்.

6
அவர் சொன்னார்
இவர் சொன்னார்
என்பதெல்லாம்
இறந்த காலம்.
பண்டைத் தழிழ்ப்
பாவலர் ,
நாவலர்,
பாட்டுடைத்தலைவர்களையும்,
பைந்தமிழையும்
பாடமாய்க்கற்பிக்க
ஆய்வுண்டு,
அரங்கு உண்டு,
கணனியிலும்
கடல் முத்துப்போல்
குவிந்துண்டு.
ஆனால் இன்பத் தமிழ் அரங்கில்
நாம்நம் கவிஞரைத்தேடுகிறோம்.
அவர்கள் காலாற தமிழோடு
கைகோர்த்து நடக்கும்போது
விரியும் அந்த விந்தையான
இன்பத்தமிழ் இனிமையை,
அவர்கள் இதழ் வழியேஉதிரும்
ஓசை ஒலி வழி வடிவில் நாம்
கேட்டு மகிழ விரும்புகிறோம்.

ஒரு கவிஞர்
உண்ணயில்,
உடுக்கையில்,
உறுஞ்சி நீர் குடிக்கையில்,
படுக்கையில்,
எழுந்திருக்கையில்,
நடக்கையில்,
பலருடன்
பகிர்ந்து வாழும்
அந்த வாழ்க்கையில்
இன்பத்தமிழும் நாமும்
எப்படி இருக்கிறோம்
என்பதைத்தேடும் பயணமிது.
அது இன்பமாய் ,
இன்னமுதமாய்,
தத்தமது கற்பனையில்
அதிகமான வரிகளோடே
கவிகோர்த்து அமைந்தால்
இன்னும் இனிக்கும்
இன்பத் தமிழ்க்கவியரங்கு
என்பதே
[08:08, 1.9.2021] Mukil Vanan: என்பதே அடியேனின்
தாழ்மையான கருத்து .
இயற்கையில் இருந்து
எழுந்து,வளர்ந்து பறந்து
விரைந்து வரட்டும் நம்
கவிஞரின் கற்பனைகள்.
வாழ்க நம் புலவர்கள்.

குறிப்பாக
தன் கற்பனை வளங்களால்
இன்று அதிகம்
கவிவரி சேர்த்த
மகள் சுகி,ரமேசுக்கு
என் பாராட்டுக்கள்.

கவிஞர் முகில் வாணன்