போகட்டும் விட்டுவிடு !( கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்)

வீணாய்ப் போன
மனிதனின் பேச்சை
போகட்டும் விட்டுவிடு .
தானாய் எல்லாம்
மாறும் அதிலே
பாடத்தைக் கற்றுவிடு .
தேனாய்ப் பேசி
தேவையை முடிப்போர்
செயலில் வல்லவராய் .
காணாவிடத்தில்
கழுகியே குடிப்பார்
கண்டால் நல்லவராய் .
மயிரைப் பிடுங்கி
தோலை உரிப்பார்
கேட்டால் விமர்சனமாம் .
தயிருக் குள்ளே
பசுவைப் பிடிப்பார்
இதுவே நிதர்சனமாம்.
பொறாமை என்பது
நிறைந்தே இருக்கும்
வெளிவரும் நேரத்தில் .
கருமை நிறைந்த
உள்ளத்தை உடையவர்
இருப்பார் ஓரத்தில் .
களவாய் பழகும்
மனிதர் இவர்கள்
காண்பது உண்மையடா .
பிளவாய் உறவு
போயினும் நன்று
பின்னால் நன்மையடா .
(கவிஞர் புரட்சிக் கமாலின் நூலை வாசித்த போது தோன்றியது )
கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்