தாயக உணவில் இருக்கும் அந்த சுவை
தரணியில் எங்கும் கிடைக்காதே
தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை
தரணியிலே வேறு எங்கும் கிடைக்காதே
சோற்றுடன் பருப்பு
சொதி சேர்த்து உண்ட நாள்
நாக்குக்கு நல்ல சுவை என
நம் வாழ்வு அன்று நகர்ந்தாச்சே!
கீரை வாழை பொத்தி
கிழங்கு வகை என நாம் உண்ட
நாட்கள் போலே இனி வருமா ?-எந்த
நாட்டு உணவும் நிகர் தருமா
வெங்காயம் வெந்தயம் தக்காளி
அம்மா சமைத்த அந்த மணம்
அந்த சுவை மறந்திடுமா ?
கூழ் அதை காச்சி ஊடி நாம் குடித்து
கூடி நின்ற நாள் இனி வருமா ?
அடுத்த வீட்டில் சமைத்தாலும்
அள்ளிக் கொடுத்து உண்ட காலம்
அன்பு கொண்டு அனை வருமே
ஒன்று சேர்ந்து வாழ்ந்தகாலம்
இனி வருமா ?அது இனி வருமா?
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 22.07.2021 உருவான நேரம் காலை18.52 மணி
அருமையான, பழைய
சுவையான , ருசியின்
உணர்வை நினைவுகளால்
மீண்டும் நீண்ட தூரம்
நம்மை அழைத்து நடக்கச்சொல்லும்
கவிவரிகள் பாராட்டுக்கள்.
கவிஞர் முகில்வாணன்