அருட்கவி தம்பிஜயா ஞானகணேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.07.2021

கனடாவில் வாழ்ந்துவரும் கவிஞர் அருட்கவி தம்பிஜயா ஞானகணேசன் அவர்கள் பன்முகதிறன் உள்ள ஒருவர் கவிஞர் அருட்கவி ஞானகணேசன்
அவர்கள் கனடிய மண்ணில் பொறியியல் துறையில் பயின்று கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் civil engineering technologist ஆகக் கடமையாற்றிவருபவர். இவரும் அமரர் பண்டிதர் அலெக்ஸசாந்தர் கவிநாயகர் கந்தவனம் ஆகியோரைக் குருவாகக்கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயின்று கனடியமண்ணில் பலமேடைகளில் வானொலிகளில் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவிதை படைத்துவருகின்றார். இவர் யாப்பிலக்கணம் கற்றுமுன்னரே இறையருளால் இயற்கையாகவே கவிதை எழுதத் தொடங்கினார்.
கனடா ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயத்தின்மீது கொண்ட பெரும்பக்தியால் பத்திற்கு மேலான பக்திப்பாடல்களை எழுதி கனடாவாழ் சிறுபிள்ளைகளின் குரல்வடிவில் “ ஞானஅமுதம்” என்னும் ஒலிப்பேழையை வெளியிட்டார்.
பாடல் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வெளியிடும் வைபவத்தில் கூடிய சங்கீதபூஷணம் இசையமைப்பாளர்கள் ஆலயத்தின் பிரதமகுரு ஆகியோர் இணைந்து „அருட்கவி „என்னும் அழகான பட்டத்தினை வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் யாப்பு இலக்கணத்தை முறையேபயின்ற அருட்கவி “ஞானப்பழரசம் என்னும் சைவசமயத்தைச் சார்ந்த பக்திப் பாடல் மலர் ஒன்றினையும் “அருட்கவிஅமுதம்” என்னும் கவிதைமலரையும் வெளியிட்டுள்ளார். பற்பல மேடை நிகழ்ச்சிகள், வானலை, வானொளி நிகழ்ச்சிகளிலும் சூம்வழியாகவும் கவிதை படைத்து வருகின்றார். வாழ்த்து மடல்கள் எழுதுவதில் கைவந்த கவிஞரிவர் இத்தனை ஆழுமைகொண்ட வலைஞர் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் உற்றார் உறவுகள் நண்பர்கள் கவியுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்ற இவர் என்றும் பல்லாண்டு வாழ அனைவரும் வாழ்த்தும் நிற்கும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

அரங்கமும் அதிர்வும் கணேஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌