முத்தம்
பிரியத்தின் முத்திரை
யாசிப்பின் ஒத்திகை
கூடலின் திறவுகோல்
ஊடலின் முற்றுப்புள்ளி
காதலின் பசி தீர்க்கும்
மூவேளை தாண்டிய
எவ்வேளைக்குமான உணவு
அன்பின் இடைவெளியும்
அதீத நெருக்கமும்
முத்தத்தை சார்ந்திருக்கும்
முத்தங்களே
உணர்வுகளுக்குச் சத்து
ஊடல்களின் போதான
சிறு விரிசல்களையும்
கூடலின் தாப முத்தங்கள்
சீர் செய்து விடுகிறது
தூய்மையான முத்தங்கள்
என்றும் புனிதமானவை
முறை தவறிய முத்தங்கள்
அசுத்தமானவை
முத்தங்கள் எப்போதும்
புனிதத்தைப் பேணட்டும்!
கவியாக்கம் – வேலணையூர் ரஜிந்தன்.