கவசமே காப்பு.

வாழ்கை
கணக்கில் பெரும்
குழப்பம்.
காலன்
கணக்கில் நித்தம்
மாற்றம்.
நேற்று
பேசியவர் இன்று
எம்மோடில்லை.
சாவு
தாராளமயமாக்கல்
நித்தம் காவு.
தாய்
நாட்டில் நிலவரம்
எப்படி?
உடல்
கூட்டை இயக்கும்
மூச்சில்
கவனம்..!
முக
கவசம் அணிய
மறக்காதே..!
அரசின்
ஆணையை
மதி..
மறந்தால்
காலன் கையில்
உன் உயிர்
அதோ கதி.
கலவர
பூமியில் இன்று
நிலவரம் சீர்கேடு.
உனை
காணும்
விருப்போடு
நானும்..
வானம்
கவ்விய வைரஸ்
ஒழியும்
காலம் தூரமில்லை.
தயக்கம்
இன்றி தடுப்பூசி
போடு.
வதந்திகளை
நம்பாதே.
நம்பிக்கை இழக்காதே
கவசமே
காப்பு மறவாதே..!

ஆக்கம் கவிஞர்தாயாநிதி பிரான்ஸ்