„எனக்குப் பழைய பாட்டுக்கள்தான் பிடிக்கும். எனக்குப் பழைய படங்கள்தான் பிடிக்கும்“அடிக்கடி பலர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவை.“பழசுகளில் உள்ள இனிமையும் சுவையும் கருத்தாழமும் இப்போது எங்கே இருக்கிறது? பாட்டுக்கள் காதைக் குடைகின்றன. படங்கள் எரிச்சலூட்டுகின்றன!“ – இப்படியொரு விமர்சனம் பெரும்பாலும் எல்லோர் வாயிலும்தான். இளையவர்கள்மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்களிலும் ஒரு சிலரைத் தவிர. ஏன் இப்படி? உண்மையிலேயே பழசுகள்மட்டும்தான் சிறந்தனவா? புதியவைகளில் எதுவுமே இல்லையா?இந்தப் பழசுகள் ஒருகாலம் புதியவையாக இருந்தபோதும் இப்படித்தான் விமர்சனங்கள் இருந்தன. இனியும் அப்படித்தான் இருக்கும். இன்றைய புதிசுகள் பழசுகளாகும்போது இவ்ற்றுக்கும் மதிப்பு வரும். இது மாற்றமுடியாத தொடர் விதி.000″ புதிய பாடல்களில் என்ன இருக்கிறது ஒரே சத்தம்தான் இருக்கிறது “ என்கிறார்கள்: உண்மைதானா?அண்மையில் ( 1999ல்) நான் இரசித்த கவிஞர் வைரமுத்துவின் மழைத்துளிக் கவிதையிலிருந்து சில துளிகள்……“மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம். இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம். நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம். இந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்? நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய். நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ…“(
2Yoganathan Sellappu and 1 other4 CommentsLikeComment