நெருடல் கூட
வருடல் தான்.
ஊடல் இன்றி
கூடல் ஏது?
மன வெளியில்
உச்சப் போர்.
ஒற்றைச் சொல்லால்
மெளனப் போர்.
அன்புக் கிறுக்கல்
அர்த்தமிழக்க
ஆனந்த வாழ்வு
அனாதையானது..
வார்த்தையும்
ஏணியும் ஒரு ரகம்
நிதானம் தப்பின்
சறுக்கி விடும்..
இழக மறுக்கும்
திமிரின் அழுத்தம்
திசைகளை
வேறாக்கி நகர
வைத்திடும்..
விரும்பி நீ
திரும்பினால்
கரும்பாய் இனிக்கும்.
நவரசம் ஏனடி?
சமரசமாகினால்
வாழ்வில்
சாமரம் வீசுமடி.
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி