ஜெர்மன் ஒபகௌசன்,சாபுறுக்கன் ஆகிய இருநகரங்களிலும் ரசிகர்களை குலுங்கச்சிரிக்கவைத்து! குஷிப்படுத்திய நாகாசின்னம் இரட்டையர்கள்!!
„“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி, இவர்களுடன் கே.பி.லோகதாஸ்!!!!
23.12.2017 அன்று ஜெர்மன் ஒபகௌசன் நகரில் „வணக்கம் ஐரோப்பா „நிகழ்விலும் 24.12.2017 சாபுறுக்கன் நகரில் நத்தார் பண்டிகை நிகழ்விலும் இருவேறு நகைச்சுவை நிகழ்வை நாகசின்னம் இரட்டையர்களும் நானும் வழங்கியிருந்தோம்.
தெம்பூட்டும் நகைச்சுவை தந்ததாக ரசிகர்கள் தரப்பும்,மற்றும் கலைஞர்கள் தரப்பும் கொண்டாடியது.
வணக்கம் ஐரோப்பா நிகழ்வில் இந்திரன் திரையிசைப்பாடல்களை வழங்கினார்.
நத்தார் பண்டிகை நிகழ்வில் இந்திரனும்,ரவியும் இணைந்து தேசியப்பாடல்களையும், திரையிசைப்பாடல்களையும் இரசிகர்களை இன்னும் மகிழ்வூட்டினார்கள்.
இந்திரன் தனது சுய ஆளுமையில் எப்போதும்போல் தனித்து தெரிகிறார்.
அதேவேளை இந்தாண்டு(2017) பிரான்ஸிலிருந்து மற்றைய நாடுகளில் அதிக கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய பெருமையையும் அவரே பெறுகிறார்.
தாயகத்தில் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் பெண் வேடமேற்று குறிப்பாக நகைச்சுவையில் அறியப்பட்டவர்கள் „தம்பி கொழும்பு „புகழ் S,ஜீவரெட்ணம்(ஜீவா) கன்னிராசி S,தங்கராஜா,அடங்காப்பிடாரி புகழ் N,T.குணம், வெளிக்கிடடி விசுவமடுவுக்கு „புகழ் .பொன்சேகா என்ற பொன்னுத்துரை ஆகியோரை குறிப்பிடலாம்.
இவர்கள் பெண்வேடத்தில் அந்த காலத்தில் எப்படி வரவேற்பு பெற்றார்களோ அதேபோன்றே புலம்பெயர்ந்த நாட்டில் பெண்வேடம் ஏற்று நகைச்சுவையில், நளின நடிப்பில் ரசிகர்களின் மனங்களை அள்ளுகிறார் கலைமைந்தன் ரவி.
தாயகத்தில் பல நகைச்சுவை மேடை நாடகங்களில் நான் இணைந்து நடித்த மூத்த (பெண்வேட நடிகர் S.தங்கராஜனை நானே கன்னிராசி என்று பட்டம் சூட்டினேன் அது பின் நாட்களில் கொண்டாடப்பட்டது.
அதேபோன்று தற்பொழுது பெண்வேடத்தில் அசத்தும் ரவியை இளைய கன்னிராசி என்று கொண்டாடி மகிழ்கிறேன். இதுவும் கொண்டாடப்படும் வாழ்த்துக்கள்.
ஒளிப்படத்தில் ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன், இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோகதாஸ் ::::
K.P.L (27.12.2017)
ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோகதாஸ்!!