கை வீசி வருதே!

விரல் பற்றிடும் நேரம் விழிகளில் பாரம்
திரை விரித்த மேகம் தரை தொடுதே ஈரம்
மண் வாசம் மூளும்
இனி எந்நாளும் உன் அன்பு நீளும்
மனம் கூடி பேசும்
தினம் என் வானில் மழைத் தூறல் வீழும்
..
வடித்த சிலை ஒன்று கை வீசி வருதே
பிடித்த கை நீங்காது பேரன்பை தருதே
காற்று தழுவி உன் கூந்தலை பாடுதே
சீற்றம் கூட சினுங்கிட சிதறிப் போகுதே..

மொழிகள் கேட்டிட கிளிகள் கூடுதே – இங்கு
கிளிகள் பேசிடும் மொழிகளும் தோற்குதே
தேவதை பாதம் இந்த பூமியே பரவசம்
தீந்தமிழ் பேசையில் அருவியல்ல அதிசயம்…

ஆக்க ம் கவிஞர் பவளம் பகீர்