அமைதியாக கிடக்கு திந்த தேசம்
சிவகந்து கொரோனா செய்த மோசம்
அனைத்துலகும் கிருமி பற்றிப் பேசும்
அழிவந்த செய்தி நமோ நாசம்
முக்கும் வாயும் மூடிக் கொண்டோம்
வீட்டில் தினமும் முடங்கி நின்றோம்
எட்ட நின்று பேசிக் கொண்போம்
உற்றார் சுற்றம் தள்ளி நின்றோம்
நெஞ்சம் கலங்கி அழுது நின்றோம்
பஞ்சம் பசியில் துவண்டு நின்றோம்
பிருகம் பசிக்க துடித்து நின்றோம்
தகசம் வீடென ஒழிந்து கொண்டோம்
அப்பாவி உயிர்களும் தியிலே வேகுது
தப்புமா என்பதும் கேள்விக்குறி ஆகுது
எப்பாவி தந்தானோ மனமிங்கு நோகுது
தப்பாமல் மருந்தொன்று வருமென ஏங்குது
வீட்டில் அடங்கினோம் விவசாயம் அழியது
காட்டு விலங்குகள் வீதில் அலையுது
நாற்று வயல்களில் பூச்சிகள் விளையுது
நாளைய உலகம் வறுமையைத் தேடுது
மனிதரின் வாழ்க்கை கேள்விக்குறி யானது
பணங்களும் பெறுமதி இல்லாமல் போனது
மனங்களும் இன்று வெறுமையில் வாடுது
கொரோனா மட்டுமே வெறிகொண்டு ஆடுது
விரைவினில் போகுமோ எங்களின் கலக்கம்
மருந்தினை கண்டுதர ஏனிந்தத் தயக்கம்
கிருமியும் ஆட்டத்தை எப்போது குறைக்கும்
பயமின்றி வாழும்நாள் எப்போது கிடைக்கும்
விடையொடு வாருங்கள் விஞ்ஞான மைந்தரே
தடைசெய்து காருங்கள் உலகத்தின் மாந்தரை
அடைபட்டு அழியட்டும் ஆட்கொல்லி கிருமியே
விடைபெற்று ஒழியட்டும் விண்ணையும் தாண்டியே
ஆக்கம கலைஞர்வனியேரான் பொன்சிவா