ஐரோப்பாவின் 24மணிநேர முதல் தமிழ் வானொலியான T.R.T யில் பணிசெய்த சிறப்புக்குரியவர் நண்பர் முல்லை மோகன் அவர்கள்!
„“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““
ஐரோப்பாவின் 24 மணிநேர மூத்த தமிழ் வானொலியான T.R.T தமிழ்ஒலி தனது முதல் ஒலிபரப்பை 14.01.1997 தொடங்கியது.
அதற்கான நிகழ்ச்சிகள் விளம்பரங்களின் ஒலிப்பதிவுகள் பரபரப்பாக 1996 களின் நடுப்பகுதியில் ஆரம்பமாகியது.
அப்போது ஜெர்மன் வர்த்தக விளம்பரங்களை ஜேர்மன் வாழ் அறிவிப்பாளர்களை வைத்து ஒலிப்பதிவு செய்ய விரும்பியது நிர்வாகம்.
அதற்கமைய ஜேர்மனியிலிருந்து பரிஸிற்கு வருகை தந்து 3நாட்கள் தங்கியிருந்து எங்களுடன் இணைந்து விளம்பரங்களை ஒலிப்பதிவு செய்தவர்கள் நண்பர்கள் முல்லை மோகன் அவர்கள்,மற்றும் R.பாலா அவர்கள்.
பின்னர் ஜெர்மன் செய்தி, வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்கள். ஜெர்மனியிலிருந்து T.R.T வானொலியில் ஐரோப்பா வானலைகளில் முதல் ஒலிபரப்பான குரலுக்குரியவர்கள் இவர்கள் இருவருமே என்பது தனிச்சிறப்பு.
முல்லை மோகன் அவர்கள் யாழ் மணிக்குரல் விளம்பர ஒலிபரப்பு சேவையிலும் சிலகாலம் பணியாற்றிய அறிவுப்பு அனுபவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஜெர்மன் மேடையில் முல்லை மோகனை ரசிகர்களோடு சந்திப்பதில் பெரும் உவகை கொள்கிறேன்.
இவ் ஒளிப்படம் ஜெர்மனியில் கடந்த கால கலைவிழாவொன்றில் எடுக்கப்பட்டது.படத்தில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்,முல்லை மோகன்,கே.பி.லோகதாஸ் ::::::::