யேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்
இவர் இன்றுபோல்
என்றும் இன்புற்று
நலமே வாழ்க வாழ்க
என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
யாழ் தந்த வில்லிசைவித்தகன், நடிப்பிசைநாய-கன்,நாடகபிரதியாளன்,நாச்சிமார்கோவிலடி ராஜன் அவர்களுக்கு06.04.20 பிறந்தநாள்.நல்-வாழ்த்துகள் பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் இறைநேசம் கலந்த இனிய வாழ்த்தை வழங்குவதில் பேரானந்தம் அடைகிறேன்.இனி வில்லிசை வித்தகன் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்கள் பற்றிய மினி பார்வை…..யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலைக்காலங்ளிலே 1968 ஆண்டு பகுதிலேயே கலைஈடுபாட்டை தீவிரமாக்கி கொண்டவர்.1972 ஆண்டு நாச்சிமார் கோவிலடி ராஜன் வில்லிசை குழு என்ற வில்லிசை குழுவை ஆரம்பித்து வடக்கில் பரவலாக நிகழ்ச்சிகள் நடத்தியவர்.அக்காலத்தில் கோலோச்சிய வில்லிசை மாமணி கலாவிநோதன் சின்னமணி அவர்களுக்கு இணையாக வில்லிசையில் இவரும் விளங்கினார் என்பது அக்கால கலைவிமர்சகர்களின் கருத்தாகவிருக்கிறது.புலம்பெயர்ந்து வந்த பின்னும் இவரது கலை ஈடுபாடு சற்றும் குறையவேயில்லை.சிறந்த நாடகபிரதியாளனாக, இயக்குநர், நடிகராக பல நாடகங்களை ஜெர்மனியில் மேடையேற்றியதோடு அங்கு நடைபெற்ற நாடக போட்டிகளில் பங்கெடுத்து நான்கு தடவைகளுக்கு மேலாக இவரது நாடகங்கள் முதற்பரிசை வென்றிருப்பது என்பது தனிச்சிறப்பு.புகலிடத்தில் தயாரான குறும்படங்களில் இவரது பங்களிப்புக்கள் சிறப்புச்சேர்ப்பவைமுழுநீள படங்களில் நினைவுமுகம் „என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம், இணைஇயக்கம்,தயாரிப்பு என்று தனது பங்களிப்பை வழங்கிய ராஜன் அவர்கள் எங்கள் முதல்மரியாதைக்குரிய மூத்த திரைப்பட, நாடக கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் திரைப்பட மான „தயவுடன் வழிவிடுங்கள்“ திரைப்படத்தில் நடித்தும் புகழ்பெற்றுள்ளார். ஏ.ரகுநாதன் அவர்களால் நேசிக்கும் கலைநேசனாக கொண்டாடப்படும் கலைஞராக நினைவுக்கு முதல்வரும் கலைஞராக இவரும் திகழ்வது இவருக்கு கிடைத்த ஆசீர்வாதம். நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களின் ஆளுமைகளை நன்கு அறிந்து 1993 ஆண்டு ஜெர்மன் தமிழ் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் அவர்களால் „ஈழவில்லிசை செம்மல் „என்ற பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.1996 ஆண்டில் கனடாவில் நடந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் விரப்பன் அவர்களால் „வில்லிசை காவலர்“ என்ற பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.இவரது ஆளுமைகளுக்கு எடுத்துகாட்டாக 2018 ஆண்டு பிரான்ஸில் தமிழ்சோலை நடத்தியவிழாவில் மாணவமணிகளுக்கு தனது வில்லிசையை சிறப்புற பயிற்றுவித்து இங்கு பிறந்து வளர்ந்த இளையதலைமுறையையும் இக்கலை சிறப்புற செய்ய முடியும் என்பதை எடுத்து காட்டியது.இவரைபோன்று இவரது உடன் பிறந்த சகோதரர்
.N.நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் தம்பையா அவர்களும் இன்றுசெய்தி தமிழ் உலகம் கொண்டாடும் கலைஞராக திகழ்வது ஆரம்பகாலங்களில் இவர் வழங்கிய பயிற்சியே என்றால் மிகையாகது.இப்படி பல சிறப்புக்கள் கொண்ட வில்லிசை வித்தகன் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களை அவரது பிறந்தநாளான 06.04.20இன்று உங்களுடனும் பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து வாழ்த்துவதில் நானும் பேரானந்தம் அடைகிறேன் வாழ்க ஆரோக்கியத்துடன் பல்லாண்டு