அலைபேசி அலறுது.பதில் சொல்லிச் சொல்லிஅலுத்துப்போச்சு.ஆரோ எவரோ அக்கறைஎனும் பெயரில் வறுத்தெடுப்பு.எடுக்கக் கூடாதெண்டு எண்ணினாலும் மனமும் கைகளும் கட்டுக்குளில்லை…கலோ வணக்கம் சொல்லுங்கோ.நான் பேசிய மூன்று வார்த்தை..மூச்சு விடாமல் முப்பது நிமிடமாயும்முடிந்த பாடில்லை.நல விசாரிப்பில் ஆரம்பம்..உங்களுக்கும் அறுபதை தாண்டியிருக்கும்…..உங்க வயசுக்காரரைத்தான் வந்தவர்கலைச்சு கலைச்சு குலைக்கிறாராம்..கொரோணாக்கும் எங்களுக்கும் என்ன எல்லைப்பிரச்சினயா என்று கேட்க நினைச்சும் மௌனம் இறுக்கியது…தன்னை பதினாறு வயசுக்கரானாக நினைத்து பத்தியமும் பாதுகாப்பும் சொனன்னபடி.மஞ்சளை கரைச்சுக் குடி.இஞ்சியை உள்ளியை இடிச்சுக்குடி.சீனி வருத்தம்இருக்கலாம் கரும் சீரகம் தேன்கனி எடு.ஆடாதோடை ஆமணக்கு வேப்பிலை அவிச்சுக் குளி..முல்லை முசுட்டை பிரண்டைகத்தாளை கடையளிலை இருக்குது..ஏன்ரா எனக்கென்ன பிசவாமா நடந்திருக்குஅவிச்சுக் குளிக்க கேட்க நினைச்சாலும்வாய்க்கு போட்ட பூட்டுக்கு சாவியை எடுக்கேல்லை..சுடு தண்ணீரை பாவி. சீன வைத்தியம் கேத்தில்லை சூடாக்கி அதன் மூக்கிலை மூக்கை வைச்சு ஆவியை இழுத்து விடு..கடைசி வரைக்கும் ஆசுபத்திரிக்கு போயிடாதை அங்கை உனை முடிச்சு கணக்கை கூட்டிப்போடுவாாங்கள்..இப்பிடி சாவுக்கு வழி சாெல்லுறசாத்தான்கள். நவீன கோமாளிகளின்தாண்டவம் எப்ப தான் தணியுமோ..வீட்டுக்கை இருந்து பார்க்க வேண்டிய பணி ஏராளம் இருக்க இவை படுற பாடு ஆருக்கு சொல்லி அழ….அதுதான் உங்களோடை….நல்லாய் சிரியுங்கோ வீட்டுக்கை நம்பிக்கையோடைஇருங்கோ..நாட்டுக்கும் உங்களுக்கும் அது தான் நல்லம்….
கவிஞர் ரி.தயாநிதி