ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான சினிமாவை வென்றடையும் நோக்குடன் பிரான்சில் உருவாக்கம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் அடுத்த கட்டம் குறித்தான கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16-02-2020) இடம்பெற்றது.
சங்கத்தின் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள நோக்கம், செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் சமீபத்திய காலங்களில் நிர்வாகரீதியாக ஏறபட்டுள்ள சிக்கல்களை களைந்து, எவ்வாறு அடுத்த கட்டத்தினை கொண்டு செல்வது குறித்த உரையாடலுக்கான கூட்டமாக திரு.குணா ஆறுமுகராசா அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் சமூக பரப்பில் இயங்கி வருகின்ற அமைப்பு பிரதிநிதிகள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலதளங்களில் இருந்தும் பங்கெடுத்திருந்தனர்.சங்கத்தின் மீதான தமது எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள், ஆதங்கங்கள் என பல்வேறு கருத்துக்களும் கரிசனையோடு தெரிவிக்கப்பட்டிருந்தனர்.
நீணட உரையாடலுக்கு பின்னராக, நிர்வாகரீதியாக அடுத்த கட்டமாக எவ்வாறு சங்கத்தினை முன்னெத்துக் செல்வது குறித்தான தமது ஆய்வினையும், பரிந்துரையினையும் முன்வைக்கும் பொருட்டு நான்கு சமூக பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் 22ம் திகதி ஏற்பாடு செய்யப்படுகின்ற கூட்டத்தில் இந்நால்வரும் தமது பரிந்துரையினை முன்வைப்பர் என கூறப்பட்டது.
இதேவேளை இந்நிகழ்வில் சமீபத்தில் தமிழர் தாயகத்தில் மறைந்த கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களுக்கான வணக்க நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.