மதுரை மண்ணில் ஈழத் தமிழைப் பேசப் போகும் மதிசுதாவின் குறும்படங்கள்…

என் படைப்புக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். ஏற்கனவே DharmA குறும்படமானது இந்தியாவின் பூனேயில் இடம்பெற்ற Bhudda film festival இல் சிறந்த பட விருதைப் பெற்றதுடன் திரையிடப்பட்டும் இருந்தது.

இப்போது அதனுடன் சேர்த்து வெடிமணியமும் இடியன் துவக்கும் குறும்படமும் மதுரையில் இடம்பெறும் அருள் ஆனந்தர் கல்லூரியின் 50 வது பொன் விழா ஆண்டு மற்றும் மதுரை சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவிலும் வரும் 10 ம் திகதி திரையிடலுக்குத் தெரிவாகியுள்ளது.

வழமையாக நாம் அனுப்பும் பிரதியில் கோளாறு என்றால் மற்றைய இடங்களில் நிராகரித்து விடுவார்கள். எனது படங்களில் ஒன்று ஏதோ ஒரு இனம் தெரியா கோளாறுக்குள்ளாகி வேலை செய்யவில்லை ஆனால் உலகசினிமா ரசிகன் (எ) பாஸ்கரன் அண்ணா அப்படத்தை திரையிடுவதற்கென்றே பெரிய சிரத்தை எடுத்துக் கொண்டார்.
ஒரு கலைஞனையும் ஒரு ஆத்மார்த்தமான படைப்பு வெளியே தெரிய வேண்டும் என்ற அந்த மனதுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா.

குறிப்பு – எம் ஊரில் யாழ்ப்பாணத்தில் 7 இடங்களிலும், கொழும்பிலும் திரையிடப்பட்ட இக்குறும்படத்தை பலரும் தவற விட்டதாக கூறியிருக்கிறீர்கள். வவுனியாவில் உள்ளவர்களுக்காக மிக விரைவில் FME media collage இல் திரையிடலும் படம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற இருக்கின்றது என்ற செய்தியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்படைப்புக்காக என்னோடு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..

வெடி மணியமும் இடியன் துவக்கும்
எழுத்து மற்றும் இயக்கம்
மதிசுதா
நடிப்பு – முல்லை யேசுதாசன் , கமலராணி, சங்கர் , ஜசீதரன், கேசவராஜன், தர்சன்
ஒளிப்பதிவு – ரிசி செல்வம்
படத்தொகுப்பு – சன்சிகன்
இசை மற்றும் ஒலி – பத்மயன்
உதவி இயக்கம் – குருநீலன்
தயாரிப்பு – ஐங்கரன் கதிரிகாமநாதன்

DharmA
எழுத்து இயக்கம்
மதிசுதா

நடிப்பு – சிந்தர்
ஒளிப்பதிவு – சன்சிகன்
படத்தொகுப்பு மற்றும் ஒலி – மதிசுதா
உதவி – கோகுல், ஸ்ரான்லி , கேஎஸ்எஸ் ராஜ்