இந்து கலாசார திணைக்களமுன்னெடுத்தமூன்று நாள் நாவலர் விழா

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்த மூன்று நாள் நாவலர் விழா இன்று ஆரம்பமாகியது. மாலை கலாகீர்த்தி உடுவை எஸ்.தில்லைநடராஜா எழுதிய நாவலர் சைவத்தின் காவலர் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நூலுக்கான அறிமுகவுரையை ஆற்றினேன்.
.
மாலை அரங்கச் சிறப்பு நிகழ்வாக நாவலர் ஆற்றிய பணிகளுள் இன்று எமது தமிழ் மக்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய பணி கல்விப் பணியா? சமயப்பணியா? என்ற தலைப்பில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. கல்விப் பணியே என்று ச.லலீசன், இ.சர்வேஸ்வராவும் சமயப்பணியே என்று ந.விஜயசுந்தரம், கு.பாலஷண்முகன் ஆகியோரும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தனர். நடுவராக கலாநிதி ஆறு. திருமுருகன் கலந்து கொண்டார்.
.
நிகழ்வில் தலைவராக சி.தனபாலாவும் பிரதம விருந்தினராக அரச அதிபர் நா.வேதநாயகனும் சிறப்பு விருந்தினராக யாழ். மாநகர ஆணையாளா் த.ஜெயசீலனும் கலந்து கொண்டனர்.