இசைப்பாடல்கள், கவிதைகள் என தன் எழுத்துக்களால் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியூர் குரூஸ் அவர்களது காலக்கோடுகள் எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
இதனுடைய வெளியீட்டு அரங்கு தலைநகர் பரிசில் 10-11-2019 ஞாயிறன்னு சிறப்பாக இடம்பெற்றது. எழுச்சி நடனம், பாடல், கருத்தாடல், வெளியீட்டரங்கு, வாழ்துக்கவிகள் என அரங்கு நிறைந்தது.
கவிஞர் பாலகணேசன் அவர்களது தமையில் இடம்பெற்ற வெளியீட்டரங்கில் கவிதைத் தொகுப்பு குறித்தான தமது உரைகளை, சமூக-அரசியல் பிரதிநிதிகளான பரா, இராஜன், யாழ்நிலா, மைக்கல் கொலின்ஸ், சுதன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
கவிதைத் தொகுப்பினை வன்னியூர் குரூஸ் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கவிஞர் பாலகணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏற்புரையினை கவிஞர் வழங்கினார்.
நிகழ்வரங்கு
தமிழீழத்தின் முதல் மாவீரர் நாள் லெப்டினன்ட் சங்கர் சத்தியநாதன் அவர்களது திருவுருப்படத்துக்கான மரியாதை வணக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே தொடங்கியிருந்தன.
விமலச் செல்வன் அவர்களது வரவேற்புரை நிகழ்வின் அரங்க நிகழ்வுகளின் வாயிலாக அமைய, ஜஸ்ரின், முல்லை மோகன் ஆகியோர் நிகழ்வினை தொகுத்திருந்தனர்.
மாவீரர் எழுச்சி நடனமும், தில்லைச் சிவம் அவர்களது இசையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் பாடலை ஆரவி, வன்னியூர் குரூஸ் ஆகியோர் வழங்க, அரங்கமும் அதிர்வும் கருத்தாடுகளம் அரங்கு கண்டது. தம்பிராஜா யஸ்ரின்,கொலின் குறூஸ் ,ஜென்னி ஜெயச்சந்திரன் ,அமிர்தநாதர், சத்தியா , மந்தாகினி பாக்கியராஜா, கே பி லோகதாஸ் ,S T S தேவராஜன்,
ஆகியோரது கருத்தாடலை கணேஸ் அவர்கள் தலைமைதாங்கிய தொடுத்திருந்தார்.
தொடர்ந்து கவிதைத் தொகுப்பு வெளியீட்டரங்கு இனிதே நிகழ, கவிஞரின் முனைப்புக்கு தமது வாழத்துக்கவிகளை சபையோர் வழங்கினர்.