இப் படம் கண்டதும்
எழுது என எண்ணமிருந்தது.
பசி என்னை திசை மாற்றியது.
எழுந்து அடுக்களை நோக்கி
நகர்ந்தன கால்கள்.இருப்பில்
பலவகை உணவு.ஆனாலும்
சக்கரை கலப்பினால் சக்கரை
வியாதிக்காரனுக்கு தடை..
இருப்பவனுக்கு இரப்பை சருங்கியும்
இல்லாதவனுக்கு விரிந்தும் பசி
அக்கப் போர் நடத்தும் துன்பியல்..
பாரெங்கும் பட்டினிப் போர்..
பகிர்ந்துண்ண பாலகர் துடிக்கையில்
பதுக்கியே வாழும் கலை பணக்காரனுக்கு
பூகம்பம் பூத்தால் நீயெங்கே நானெங்கே
மானிடா விழி.நீயும் கடவுளாகலாம்…